undefined

கார்த்திகை பெளர்ணமி கிரிவலம்... திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 

கார்த்திகை மாத பெளர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக இன்று அதிக எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது.

நாகர்கோவில், மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தொலை தூர ஊர்களிலிருந்து நேரடி அதிநவீன பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக குளிர்சாதனமும் படுக்கை வசதியோடும் பேருந்துகள் விடுமுறை நாட்களில் இயக்கப்படும் எனத் தகவல்.

சென்னையிலிருந்து மட்டும் 160 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பக்தர்கள் அதிகம் வருவார்கள் என கருதி ஏஸி, ஏஸி வசதி இல்லாத பேருந்துகள் தொடர்ச்சியாக புறப்படும். 

நேற்று திருவண்ணாமலை மகாதீபம், மலை உச்சியில் ஏற்றப்பட்ட நிலையில், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குழுமி  உள்ளனர். பக்தர்கள் தரிசனம் முடித்து, தங்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக திருவண்ணாமலையில் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது திருவண்ணாமலையில் இருந்தும் பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!