கரூர் கூட்ட நெரிசல் வழக்கு... 2 வது நாளாக த.வெ.க. தலைவர்களிடம் சிபிஐ விசாரணை!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜயின் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன்படி, நேற்று மற்றும் இன்று இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள், த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் இணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிடம் கரூர் சர்க்யூட் ஹவுஸில் சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
சம்பவம் நடந்த நாள் கூட்ட நிர்வாகம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சிசிடிவி காட்சிகள், கூட்ட கணிப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களைப் பற்றி இருவரிடமும் சிபிஐ விரிவாக தகவல் கேட்டது. இதுவரை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. அலுவலக பணியாளர் குருசரனும் முன்னதாக அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.
41 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், “அரைநேரத்தில் நடந்த மிகப்பெரிய குறைபாடு” என சிபிஐ முக்கிய கோணங்களில் ஆழமாக விசாரித்து வருகிறது. நாளையும் விசாரணை தொடரவுள்ளதாக தகவல். 2026 சட்டமன்றத் தேர்தல் அரசியலிலும் இந்த விசாரணை பெரிய தாக்கம் ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!