கரூர் துயரம்... குற்றப்பத்திரிக்கையில் விஜய் பெயர் சேர்ப்பு?
கரூர் துயர சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது.
இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தினர். “கூட்ட நெரிசலை கவனிக்கவில்லையா?”, “தண்ணீர் பாட்டில்கள் வீசியபோது நிலைமை புரியவில்லையா?”, “வாகனத்தின் மேலிருந்து அபாயம் தெரியவில்லையா?” என பல கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கூட்ட நெரிசலுக்கு நடுவே பரப்புரை வாகனம் ஏன் முன்னேறியது என்றும் விசாரிக்கப்பட்டது.
இதற்கு விஜய் அளித்த விளக்கத்தில், வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றியே செயல்பட்டதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை தவறியதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிப்ரவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!