undefined

 கரூர் கூட்ட நெரிசல் வழக்கு...  சிபிஐ முன் விஜய் ஆஜர்!

 
 

த.வெ.க. தலைவர் விஜய், வரும் ஜனவரி 12ம் தேதி சிபிஐ முன் ஆஜராக உள்ளார். தவெக நிர்வாகிகளிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து, தற்போது விஜயிடம் நேரடியாக விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கரூர் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்த விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் பல கட்ட விசாரணைகள் முடிந்த நிலையில், முக்கிய நபராக விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுவதற்காக விஜய் ஜனவரி 11ம் தேதி டெல்லி செல்ல உள்ளார். ஜனவரி 12ம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதில் அரசியல் மற்றும் பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!