undefined

காசி தமிழ்ச் சங்கமம்... பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார்.. அதிவிரைவுப் படகுகள், ட்ரோன்கள் ஏற்பாடு!

 

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபெறும் 'காசி தமிழ்ச் சங்கமம்' நிகழ்ச்சிக்காகச் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு கடந்த டிசம்பர் 2ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் 80,000 முதல் 1 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று வாராணசி காவல்துறை துணை ஆணையர் சரவணன் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இந்த 15 நாள் நிகழ்ச்சிக்குச் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக 3 கம்பெனி ரிசர்வ் போலீஸார் மற்றும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் நமோ காட் பகுதியை ஒட்டியுள்ள கங்கை நதியில் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள 4 அதிவிரைவுப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தப் படகுகள் 8 கி.மீ. தூரத்தை 7 நிமிடங்களில் கடந்து செல்லும் திறன் கொண்டவை. பாதுகாப்புப் பணியை உன்னிப்பாகக் கண்காணிக்க 10 ட்ரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!