கச்சத்தீவு திருவிழா: இந்தியர்களுக்கு 15ம் தேதி முதல் விண்ணப்பம்!
இந்தியா–இலங்கை இடையே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ளது. இலங்கையின் நெடுந்தீவிலிருந்து 18 கடல் மைல் தூரத்தில் இந்த தீவு அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயம் பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது.
இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா வரும் பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி இந்தியாவில் இருந்து திருவிழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்கு ஜனவரி 15 முதல் 25 வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. 5 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழா, இருநாட்டு பக்தர்களிடையே ஆன்மிக இணைப்பை வலுப்படுத்தும் நிகழ்வாக கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!