தெற்கிலிருந்து இந்தியாவின் வரலாற்றை எழுதுவோம்... கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற பகுதிகளை திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றும் பணி நிறைவடைந்த நிலையில், அதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த புதிய அருங்காட்சியகம் மூலம் கீழடி நாகரிகத்தின் சான்றுகள் பொதுமக்கள் நேரில் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களை பெற்றோர் அழைத்து வந்து பார்வையிடுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துகள் உலக வரலாற்றில் முக்கிய இடம் பெறும் வகையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் தமிழி எழுத்துகள் இடம்பெற்றுள்ளமை பெருமையை அதிகரிப்பதாக தெரிவித்தார். இதனுடன் ராமநாதபுரம்–நாவாய் மற்றும் ஈரோடு–நொய்யல் பகுதிகளில் புதிய அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியதாகவும் கூறினார்.
தமிழர் தொன்மையின் தடங்களை தொடர்ந்து ஆராய்ந்து உலகுக்கு அறிவிப்போம் என முதல்வர் உறுதியளித்தார். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை தெற்கிலிருந்தே எழுதுவோம் என்ற அவரது கருத்து பெரும் கவனத்தை பெற்றுள்ளது. கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் தமிழக வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!