ரவிக்காகவே ஓடும் ‘பராசக்தி’… கெனிஷா பேச்சால் சலசலப்பு!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியான படம் ‘பராசக்தி’. இந்த படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், பாடகி கெனிஷா நடிகர் ரவி மோகனுடன் சென்னை வடபழனி காசி தியேட்டரில் ‘பராசக்தி’ படத்தை பார்த்தார். படம் முடிந்து வெளியே வந்த கெனிஷா செய்தியாளர்களிடம் பேசினார். “ரவிக்காக மட்டுமே இந்த படம் ஓடும். என் கண்களுக்கு வேறு யாருமே தெரியவில்லை. ஹீரோவாக இருந்தாலும், வில்லனாக இருந்தாலும் இந்த படத்தில் நம்பர் 1 ரவி தான். இரண்டாம் பாதியில் அவரை தவிர படமே இல்லை,” என உற்சாகமாக தெரிவித்தார்.
மேலும் அவர் ‘ஜனநாயகன்’ படம் குறித்தும் பேசினார். “விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் எப்போது வெளியாகிறதோ, அன்றுதான் உண்மையான பொங்கல்,” என்று கூறினார். கெனிஷாவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!