undefined

   கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை மருத்துவமனையில் அனுமதி?

 
 

கேரள முதல்வர் பினராயி விஜயன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எந்த அவசர சிகிச்சையும் இல்லை என கூறப்படுகிறது.

ஆண்டுதோறும் உடல்நல பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த நடைமுறையின் ஒரு பகுதியாகவே இம்முறையும் அவர் வந்துள்ளார். தற்போது ரத்த பரிசோதனை, இ.சி.ஜி உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததும் விரிவான தகவலுடன் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அவரது ஆதரவாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!