கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
கேரளாவில் 2019ஆம் ஆண்டு கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (KIIFB) வெளியிட்ட மசாலா பத்திரங்கள் தொடர்பான வழக்கில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (FEMA) மீறியதாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பியுள்ளது. இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (KIIFB), 2019ஆம் ஆண்டில் லண்டன் பங்குச்சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு, சுமார் ரூ. 2,150 கோடி திரட்டியது. இத்தகைய ரூபாயில் வெளியிடப்பட்ட பத்திரங்களை வெளியிட்ட இந்தியாவின் முதல் மாநிலம் கேரளா ஆகும். திரட்டப்பட்ட இந்த நிதியைச் சட்டவிரோதமாகத் திசை திருப்பியதாகவும், அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறியதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறை அனுப்பியுள்ள நோட்டீஸில் சுமார் ரூ. 468 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது:
முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது தனிச் செயலாளர், முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்குக்குச் சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!