விஷத்தைப் பரிமாறும் கேரளா.. முட்டைக்குள் நெளியும் புழுக்கள்.. கல்லூரி மாணவர்கள் மயங்கி விழுந்த கொடூரம்!

 

கொரோனா தொற்று பரவல் துவங்கிய நிலையில், சீனாக்காரன் பாம்பையும், பூரானையும் சாப்பிட்டு உலகம் முழுக்கவே நோயை பரப்பி விட்டான் என்று கதறினோம். ஆனால், சப்தமில்லாமல் கேரள மக்கள் இதைத் தான் இப்போது செய்ய துவங்கியுள்ளனர். ஒரு பக்கம் கேரளாவின் மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து அவ்வப்போது வீடியோக்களும் செய்திகளும் வெளியாகி கொண்டிருக்கிறது. இன்னொரு புறம், தமிழகத்தின் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதும், லஞ்சம் வாங்கி கொண்டு தமிழக எல்லையில் பணியில் இருக்கும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதுமாக செய்திகளும், வீடியோக்களும் வாட்ஸ்-அப்களில் வலம் வருகின்றன. இந்நிலையில், கேரள உணவகங்களில் பெரும்பாலனவைகளில் உணவே விஷமாக பரிமாறப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.

சமீபத்தில் ஷவர்மா என்கிற வார்த்தையை அதிகம் பிரபலப்படுத்திய பெருமை கேரளாவுக்கே சேரும். ஷவர்மா சாப்பிட்ட மாணவி, மரணமடைந்த நிலையில், பலரும் ஷவர்மா சாப்பிடும் ஆசையையே விட்டு விட்டனர். அதன் பின்னர், பிரியாணியில் எலி தலை, மட்டன் குழம்பில் புழுக்கள், கரப்பான் பூச்சி என அவ்வப்போது கேரள உணவகங்களில் பரிமாறப்பட்டு, சாப்பிடும் மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில்  உள்ள ஓட்டல் ஒன்றில், கல்லூரி மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட முட்டையில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், வாகமனில் வாகலாண்ட் எனும் பெயரில் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் சுற்றுலா வந்த மாணவர்கள் சிலர் இந்த ஓட்டலில் தங்கி இருந்துள்ளனர். இவர்கள்  காலை உணவாக முட்டை மசாலாவும், தோசையும் ஆர்டர் செய்திருந்தனர்.

இதில் இரண்டு மாணவர்களின் முட்டையில் புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல சில மாணவர்கள் இந்த மசாலாவை சாப்பிட்டு விட்டு, மயக்கமடைந்து விழுந்துள்ளனர். இதனையடுத்து மயக்கமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மற்ற மாணவர்கள் ஓட்டல் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 

ஆனால் ஹோட்டல் அதிகாரிகள் மாணவர்களை தாக்க முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்னை பெரிதான நிலையில் போலீசாருக்கு இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து ஓட்டலை பரிசோதித்துள்ளனர்.

சோதனையில் ஏற்கெனவே சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஓட்டல் ஏற்கெனவே இதே போன்ற குற்றச்சாட்டில் சிக்கியிருந்தது. இதனையடுத்து இரண்டு முறை அதிகாரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்துள்ளனர். இருப்பினும் மீண்டும் மீண்டும் இதே போன்ற சம்பவத்தில் ஓட்டல் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் ஒருவர் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடன் அதே ஓட்டலில் உணவு சாப்பிட்ட 21 பேர் உடல்நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதே போல வாழத்தோப்பு பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்தார். எர்ணாகுளத்தின் வடபரவூர் பகுதியில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்ட 68 பேர் உணவு நஞ்சு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது போன்ற சம்பவங்கள் அதிகரித்த நிலையில் அம்மாநிலத்தில் உணவு பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?