undefined

கேரளா கழிவுகள் கன்னியாகுமரியில் கொட்டல்... லாரியை மடக்கி பிடித்த  பொதுமக்கள் !  

 

கேரளாவில் இருந்து மீன் மற்றும் மருத்துவமனை கழிவுகளை கூண்டு லாரிகளில் ஏற்றி நள்ளிரவு நேரங்களில் கன்னியாகுமரி மாவட்ட ஒதுக்குப்புற பகுதிகளில் கொட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் திருவனந்தபுரத்திலிருந்து வந்த லாரி களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் மேம்பாலம் வழியாக சென்றது.

சிராயன்குழி பகுதியில் சென்றபோது கடும் துர்நாற்றம் வீசியதை அப்பகுதி பொதுமக்கள் கவனித்து லாரியை மடக்கிப் பிடித்தனர். பின்னால் திறந்து பார்த்தபோது மீன் கழிவுகள் ஏற்றியிருந்தது தெரியவந்தது. உடனடியாக தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து லாரியை பறிமுதல் செய்தது.

பின்னர் லாரி உண்ணாமலைக்கடை டவுன் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. செயல் அலுவலர் ஜோஸ்லின் ராஜ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத் தொகை செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து லாரி மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!