21 மாநிலங்களில் மீண்டும்  மண்ணெண்ணெய் விநியோகம்...   மத்திய அரசு அதிரடி உத்தரவு!

 

சர்வதேச அளவில் நிலவி வரும் எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்க, அடுத்த 60 நாட்களுக்கு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் உரிம விதிமுறைகளில் தற்காலிக தளர்வுகளை பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்கவும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த அவசரகால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லை என அறிவிக்கப்பட்ட டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இனி நியாய விலைக் கடைகள் மூலம் மண்ணெண்ணெய் கிடைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசால் அடையாளம் காணப்படும் இரண்டு பெட்ரோல் நிலையங்களில் தலா 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெய் சேமித்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமையல் மற்றும் விளக்கு எரிக்கும் தேவைகளுக்காக மட்டுமே இந்த எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய போர்ச் சூழல் காரணமாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த விநியோகத்தை மேற்கொள்ளும். பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் அறிவிப்பு, சமையல் எரிவாயு கிடைக்காமல் சிரமப்படும் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!