undefined

 ஆஸ்கர் போட்டியில் ‘கெவி’... தமிழ் தயாளன் இயக்கிய படம் பரிசீலனையில்!  

 
 

தமிழ் தயாளன் இயக்கத்தில் கடந்த ஜூலை 18 அன்று வெளியான ‘கெவி’ திரைப்படம், 98வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிசீலனை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அறிமுக நடிகர் ஆதவன் நாயகனாக நடித்த இந்த படத்தில் ஷீலா, ஜாக்குலின் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராசி தங்கதுரை வசனம் எழுதிய இந்தப் படத்துக்கு ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்திருந்தார். பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார்.

கொடைக்கானல் அருகிலுள்ள மலைவாழ் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘கெவி’, திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் கதை சொல்லும் விதம், இயற்கை காட்சிகள் மற்றும் இசை பாராட்டைப் பெற்றிருந்தன. இந்த வெற்றியைத் தொடர்ந்து, படம் ஆஸ்கர் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருப்பது திரைப்படக்குழுவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘கெவி’யுடன், கிரிதரன் இயக்கிய ‘தலித் சுப்பாயா: ரெபெல்ஸ் வாய்ஸ்’ ஆவணப்படமும் ஆஸ்கர் ரேஸில் இணைந்துள்ளது. 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா 2026 மார்ச் 15 அன்று அமெரிக்காவின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!