கலீதா ஜியா மறைவு: இறுதிச் சடங்கில் ஜெய்சங்கர் பங்கேற்பு!
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், மறைந்த அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியுமான கலீதா ஜியா உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வங்கதேச அரசியலில் முக்கிய இடம் பிடித்திருந்த கலீதா ஜியாவின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தலைநகர் டாக்காவில் இன்று நடைபெற்ற கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்திய அரசின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த நிகழ்வில் பங்கேற்றார். இது இரு நாடுகளின் உறவை வெளிப்படுத்தும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இறுதிச் சடங்கின்போது, பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானிடம் அமைச்சர் ஜெய்சங்கர் வழங்கினார். முன்னாள் பிரதமரின் மறைவுக்கு இந்திய அரசு மற்றும் மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!