ஈரான் தலைமை மதகுரு கமேனி உயிரிழப்பு... 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பு, 7 நாட்கள் பொதுவிடுமுறை அறிவிப்பு!
ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுப் படைத் தாக்குதலில் அவர் பலியானதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் கமேனியின் குடும்பத்தினரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் அணு ஆயுதத் திட்டம் தொடர்பாக ஏற்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு மகளிர் தொடக்கப் பள்ளி மீது ஏவுகணைகள் வீசப்பட்டதில் பல மாணவிகள் பலியானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!