காமேனி உயிரிழப்புக்கு இளம்பெண் வாழ்த்து!
ஈரானில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட இளம்பெண் மோர்டிசியா ஆடம்ஸ், சித்ரவதைக்கு ஆளான பின்னர் கனடாவுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கனடாவில் வசித்து வரும் அவர், கடந்த ஜனவரியில் ஈரான் தலைவர் காமேனிக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
அந்த பேரணியில் எடுத்த வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “உன் கல்லறையின் மேல் நாங்கள் நடனமாடுவோம் என்று சொன்னேன் அல்லவா?” என அவர் பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் காமேனியின் மரணம் குறித்து கடுமையான கருத்தையும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக போராட்டத்தின் போது காமேனியின் உருவப்படத்தை எரித்து, அதிலிருந்து சிகரெட்டை பற்றவைத்த வீடியோ வைரலானதன் மூலம் அவர் உலகளவில் கவனம் பெற்றார். இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!