undefined

கொடூரத்தின் உச்சம்...  தேர்தலில் போட்டியிட தகுதி பெற மகளை கொன்ற தந்தை கைது

 
 

மராட்டிய மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முயன்ற தந்தை ஒருவர் தனது மகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரூர் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்க் என்பவருக்கு ஒரு மகனும், இரட்டை மகள்களும் உள்ளனர். பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறையால் அவர் சிக்கலில் இருந்தார்.

முதலில் தனது குழந்தைகளை தத்தெடுக்க ஏற்பாடு செய்ய அவர் முயன்றதாக கூறப்படுகிறது. அது முடியாததால் தனது மகள்களில் ஒருவரை பைக்கில் அழைத்து சென்று கால்வாயில் தள்ளியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கால்வாயில் குழந்தையின் உடலை கண்ட விவசாயிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் போலீசார் பாண்டுரங்கை விசாரணைக்கு அழைத்த போது அவர் முதலில் தவறான தகவல்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மகளை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!