கார்த்திகை கிருத்திகை ... முருக பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய சிறப்பு வழிபாடுகள்!
கிருத்திகை நட்சத்திர தினம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுபவர்களுக்கு சகல செல்வங்களும் அருள்பெறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகனுக்கு கிருத்திகை நாள் விசேஷமானதாக இருப்பதால், பக்தர்கள் இந்த நாளை தவறாமல் நோன்பு, தீப வழிபாடு மற்றும் வேல் வழிபாட்டுடன் சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றனர்.
கிருத்திகை விரதத்தில் பக்தர்கள் காலை முதல் விரதமிருந்து முருகனைத் தியானிக்கின்றனர். முருகனின் வேலுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி வைத்து அபிஷேகம் செய்வது மிக உயர்ந்த பலன்களை அளிக்கும். அவல், பொரி, கற்கண்டு போன்றவை நைவேத்தியமாக படைப்பது நல்லது. மாலை நேரத்தில் 6 தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் சகல செல்வங்களும் பெருகும் என நம்பப்படுகிறது. முருக மந்திரங்கள், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை ஓதுவது மன அமைதியையும், ஆன்மீக பலத்தையும் தரும்.
முருகனுக்கு உகந்த வேல் வழிபாடு இந்த நாளின் முக்கிய அம்சமாகும். தை, ஆடி, கார்த்திகை மாதங்களில் வரும் கிருத்திகை தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த கிருத்திகை நாளில் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடும்போது அவர்கள் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கிருத்திகை நாள் பக்தர்களுக்கு ஆன்மீக திருப்தியையும், மனநிறைவும் தரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!