கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி ரத்து... சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் அம்சமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து இயற்கை அழகை ரசித்து படகு சவாரி செய்து மகிழ்கிறார்கள்.
இந்த நிலையில், கொடைக்கானலில் இன்று படகு சவாரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நகரில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரியில் பாதுகாப்பு சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வானிலை சீரான பிறகு மீண்டும் படகு சவாரி தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!