undefined

மனித நேயம்... ஈஷா அறக்கட்டளை சார்பில் கோவையில் இலவச தகன சேவை தொடக்கம்!  

 

 

இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மற்றும் ஈஷா அறக்கட்டளை இணைந்து ‘இலவச தகன சேவையை’ தொடங்கியுள்ளது. தொண்டாமுத்தூர் வட்டார பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் அமைக்கப்பட்ட நவீன எரிவாயு மயானம் தற்போது முழுச் செயல்பாட்டில் உள்ளது.

5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளைச் சேர்ந்த மக்கள் இந்த சேவையின் மூலம் பயன் பெறுகின்றனர். இறுதி சடங்குகளுக்கான அதிக செலவினத்தை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். நிதிச்சுமையின்றி கண்ணியமான முறையில் இறுதிச்சடங்கு நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த முயற்சி உள்ளூர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் இந்த திட்டம், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!