டாட்டா ஸ்டீலில் குகேஷ் அசத்தல் வெற்றி… !
நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் டாட்டா ஸ்டீல் 88-வது சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் 8-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. இதில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய உலக சாம்பியன் குகேஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
41-வது நகர்த்தலில் சுலோவேனியாவைச் சேர்ந்த விளாடிமிர் பெடோசீவை குகேஷ் வீழ்த்தினார். தொடர் தோல்விகளுக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. கடைசி கட்டத்தில் குகேஷ் காட்டிய துல்லியமான நகர்த்தல்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
8 சுற்றுகள் முடிவில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் 5½ புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஜவோகிர் சிந்தாராவ் 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். குகேஷ் 2 வெற்றி, 4 டிரா, 2 தோல்வியுடன் மொத்தம் 4 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!