இன்று முதல் தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு குப்பை திருவிழா!
தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு குப்பை சேகரிப்பு இயக்கம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2025ஆம் ஆண்டு தூய்மை இயக்கம் திட்டத்தை அறிவித்தார். அதன் கீழ் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட குப்பை சேகரிப்பு இயக்கத்தில் ஆயிரக்கணக்கான டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
அதன்படி ஜனவரி 21 முதல் 23 வரை ‘குப்பைத் திருவிழா’ என்ற பெயரில் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. இந்த மூன்று நாள்களில் தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் குப்பை சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தரம் பிரிக்கப்பட்ட உலர் கழிவுகளை அந்த மையங்களில் ஒப்படைக்கலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டும் 200 இடங்களில் குப்பை சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெகிழிகள், காகிதங்கள், மரத்துண்டுகள், மின்னணு கழிவுகள், கண்ணாடி மற்றும் அட்டைப் பெட்டிகளை பொதுமக்கள் வழங்கலாம். தங்கள் பகுதி சுகாதார ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை பெறலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!