undefined

 பிப்ரவரி 16ம் தேதி மத்திய கைலாஷில்  ‘எல்’ வடிவ மேம்பாலம்   திறப்பு! 

 
 

சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 16-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். ராஜீவ் காந்தி சாலை சர்தார் பட்டேல் சாலையிலிருந்து தொடங்கும் இந்த சந்திப்பில் நீண்ட காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வந்தது. இதை குறைக்க சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ் காந்தி சாலைக்கு நேரடியாக செல்லும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் செயல்பாட்டுக்கு வந்தால் அடையாறில் இருந்து கிண்டி செல்லும் வாகனங்களும், கிண்டியில் இருந்து அடையாறு நோக்கிச் செல்லும் வாகனங்களும், பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து கிண்டி செல்லும் வாகனங்களும் தடையின்றி பயணிக்க முடியும். இருவழி அகலத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம் ஒருவழி போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாலத்தின் இருபுற தடுப்புச்சுவர்களின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் வளைவு பகுதிகளில் வேக கட்டுப்பாடு அவசியம் என்பதால் எச்சரிக்கை பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மேம்பால பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பொதுமக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இந்த மேம்பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அவர் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!