undefined

 பெண்களே உஷார்... மிக்ஸியில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு!

 
திருவாரூர் மாவட்டம் பின்னவாசல் அருகே 8 மாத குழந்தைக்கு உணவு அரைத்துக் கொண்டிருந்த போது மிக்ஸியில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் அருகே பின்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அழகு திருநாவுக்கரசு.  விவசாய கூலி வேலை செய்து வரும் இவரின் மனைவி சிந்து பைரவி. இந்த தம்பதியருக்கு 3 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். 

இந்நிலையில், தனது 8 மாத குழந்தைக்கு உணவு அரைத்து கொடுக்க முற்பட்டபோது, மிக்ஸியில் இருந்து மின்சாரம் தாக்கி சிந்து பைரவி. உடனடியாக கணவரும், அக்கம் பக்கத்தினரும் ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ பணியாளர்கள் சோதித்து சிந்து பைரவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சிந்து பைரவியின் உடலை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?