undefined

திருப்பதியில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்... 10 நாட்களுக்கும் சொர்க்கவாசல் வழியாக அனுமதி!

 

இன்று அதிகாலை திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், 10  நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ள முடிவின்படி, இன்று முதல் ஜனவரி 8ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்குச் சொர்க்கவாசல் (வைகுண்ட துவாரம்) வழியாகப் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று மிக முக்கியப் பொறுப்புகளில் உள்ள தலைவர்கள் தவிர மற்றவர்களுக்கான விஐபி (VIP) தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் இந்த மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தின் மிக உன்னதமான தினமாகக் கருதப்படுவதால், ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!