லட்சுமி மேனன் அடுத்த சர்ச்சை... படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்ததால் படத்தில் இருந்து அதிரடி நீக்கம்!
முன்னணி நடிகர்களுடன் நடித்து அறிமுகமாகி, பின்னர் சினிமாத் துறையில் இருந்துச் சில காலம் ஒதுங்கியிருந்த நடிகை லட்சுமி மேனன், மீண்டும் நடிக்க வந்த நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். மலேசியாவில் தொடங்கவிருந்த ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பிற்குச் சரியாக ஒத்துழைப்பு வழங்காததால், அவரைப் படத்தில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டதாகத் தயாரிப்புக் குழு அறிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக, தற்போது நடிகை 'கயல்' ஆனந்தி ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் காமராஜ் இயக்கும் இந்தப் புதிய படத்தில் நட்டி (நட்ராஜ்) மற்றும் விதார்த் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருந்தனர். மலேசியாவில் படத்தின் பூஜை நடந்த நிலையில், லட்சுமி மேனனின் ஒத்துழைப்பின்மை படக்குழுவினரைக் கடும் சிரமத்திற்கு ஆழ்த்தியுள்ளது. அவர் தொடர்ந்து நான்கு நாட்கள் படப்பிடிப்புக்கு வராமலும், காலை 9 மணி படப்பிடிப்புக்கு மதியத்துக்கு மேல் வந்துச் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
நடிகையின் இந்தப் போக்குத் தொடர்ந்தால், படப்பிடிப்புக் கால தாமதம் ஆகும் என்று நினைத்தத் தயாரிப்புக் குழு, அவரைப் படத்தில் இருந்து நீக்கும் முடிவை எடுத்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, லட்சுமி மேனன் கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் உள்ள ஒரு பாரில் நடந்த கோஷ்டி மோதலில் அவர் தலைமறைவாகி, பின்னர் முன்ஜாமீன் பெற்றார். ஒருவழியாக அந்த வழக்கும் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
லட்சுமி மேனன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாகச் சென்னை உள்ளிட்டப் பகுதிகளில் படமாக்கப்பட உள்ள காட்சிகளில் நடிக்க 'கயல்' ஆனந்தி ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!