லட்சுமி நாராயண யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... இந்த பரிகாரத்தை மறக்காதீங்க!
லட்சுமி நாராயண யோகத்தால் இந்த டிசம்பர் மாதத்தில் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுகிறது. பிற ராசிக்காரர்கள் கீழ்காணும் பரிகாரத்தை மறக்காதீங்க. டிசம்பர் மாதத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் காலபுருஷனின் ஒன்பதாம் வீட்டில் பயணிக்கின்றன. இந்த அமைப்பு மீது சனி பகவானின் முழுப் பார்வை விழுவதால், அரசியல் களத்தில் சில கடுமையான தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள்: உலக நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களுக்கு இந்த மாதம் கண்டம் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த மாதத்தில் குரு வக்கிரமாக இருப்பதால், பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. மிகப்பெரிய விபத்துகள், குறிப்பாக விமான விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளது. மழை, வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருக்கும். சென்னை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படலாம்.
கோவை, திருப்பூர், ஈரோடு, விருத்தாசலம் போன்ற பகுதிகளில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த ஊர் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களுக்கும் சிக்கல்கள் உருவாகலாம். குழந்தைகள் மற்றும் முதியோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
விருச்சிக ராசியில் சுக்கிரன் மற்றும் புதன் இணைவதால் உருவாகும் லட்சுமி நாராயண யோகத்தின் காரணமாக, இந்த ஐந்து ராசிகள் அதிகப்படியான நற்பலன்களைப் பெறவுள்ளன:
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகத்தால் மிகவும் அருமையாக இருக்கும். எல்லா வகையிலும் அதிர்ஷ்டங்கள் கிடைக்கும்.
ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் அதிக நற்பலன்களைப் பெறுவார்கள்.
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தின் மத்திமத்தில் அதிக அளவு பண வரவு இருக்கும்.
கும்பம் ராசியினருக்கு பொருளாதார நிலை நிச்சயமாக உயர்வடையும். கடன் வாங்குவதை தவிர்த்திடுங்க. இந்த மாதத்தில் உங்களிடம் பணம் சேரும் என்பதால், அந்த யோகத்தைக் கடன் வாங்கி இழந்துடாதீங்க. அதே போன்று இந்த மாதத்தில் மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கும் பொருளாதாரம் உயர்வடையும். மேற்சொன்ன ராசிகளுக்கு வீடு, நிலம், புதிய கடனுக்கான ஒப்புதல் மற்றும் வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது.
கவனிக்க வேண்டிய ராசிகள்:
இந்த மாதத்தில் மகரம் ராசியில் பிறந்தவர்கள், உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மேஷம் மற்றும் தனுசு: வண்டி வாகனங்களில் மிகுந்த கவனத்துடன் பயணிக்க வேண்டும். கொழுப்பு சார்ந்த பிரச்சினைகள், காய்ச்சல், சுளுக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் விஷயத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.
பரிகாரம்:
அனைத்து ராசியினருமே இந்த டிசம்பர் மாதத்தில் சிவபெருமான் மற்றும் முருகப் பெருமான் வழிபாடுகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!