லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை வெற்றி - மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் நிறுவனரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவிற்கு, டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. 77 வயதான அவருக்குக் கண் புரை மற்றும் விழித்திரை தொடர்பான பாதிப்புகள் இருந்த நிலையில், இதற்காக அவர் டெல்லியில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கண் மருத்துவமனைகளுக்கான மையக் குழுமத்தின் தலைவரும், மருத்துவ இயக்குநருமான டாக்டர் மஹிபால் சிங் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டனர். அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, எவ்விதச் சிக்கல்களும் இன்றி இந்த அறுவை சிகிச்சை சிறப்பாக முடிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிகிச்சை காலத்தில் லாலு பிரசாத் யாதவ் மருத்துவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், தற்போது அவரது கண் பார்வை சீராக உள்ளதால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன் தந்தையின் உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள அவரது மகள் பாரதி, "அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; சிறந்த முறையில் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினருக்கும், தந்தையின் உடல்நலத்திற்காகப் பிரார்த்தனை செய்த அனைத்து நலம் விரும்பிகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் ஜாமீனில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், வயது முதிர்வு மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!