ரூ.10 கோடி லம்போர்கினி விபத்து... தொழிலதிபர் மகன் கைது!
உத்திரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடந்த லம்போர்கினி சொகுசு கார் விபத்து தொடர்பாக உள்ளூர் புகையிலை தொழிலதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ராவை போலீஸார் கைது செய்துள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) பிற்பகல் 3 மணியளவில், ரூ.10 கோடிக்கும் மேல் மதிப்புள்ள லம்போகினி ஸ்போர்ட்ஸ் கார், கான்பூரின் Kanpur நகரில் உள்ள குவால்டோலி பகுதியில் பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சுமார் 10 பேர் காயமடைந்தனர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில், விபத்துக்கு முன் கார் அதிவேகமாகச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் வைரலான வீடியோக்களில், விபத்துக்குப் பின்னர் பவுன்சர்கள் சிலர் சிவம் மிஸ்ராவை ஓட்டுநர் இருக்கையிலிருந்து இழுத்து, பின்னர் மற்றொரு காரில் அழைத்துச் செல்வது காணப்படுகிறது.
சம்பவ நேரத்தில் காரை ஓட்டியது தாமே என்று ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைய முயன்றிருந்தார். ஆனால், சிவம் மிஸ்ரா தான் வாகனம் ஓட்டியதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இருப்பதாக போலீஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது சரணடைதல் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவம் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, கான்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!