லம்போர்கினி கார் மோதி 6 பேர் படுகாயம்... தொழிலதிபர் மகன் கைது!
உத்தரப் பிரதேசம் கான்பூரில் சொகுசு லம்போர்கினி கார் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதில் 6 பேர் படுகாயமடைந்தனர். குவால்டோலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.15 மணியளவில் இந்த விபத்து நடந்தது. புகையிலை நிறுவனம் நடத்தும் கே.கே. மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. விபத்து நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிவேகமாக சென்ற கார் முதலில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை மோதியது. பின்னர் சாலையோரம் நின்றிருந்த பாதசாரிகள் மீது பாய்ந்தது. காயமடைந்த 6 பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்றதாகவும், பொதுமக்கள் காரின் கண்ணாடியை உடைத்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் காரை ஓட்டியது ஓட்டுநர் என தகவல் பரவியதால் சர்ச்சை எழுந்தது. சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் ஷிவம் மிஸ்ராவே ஓட்டியதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணை முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டில் காவல் நிலைய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது ஷிவம் மிஸ்ரா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!