அதிவேக லம்போர்கினி விபத்து… பாதசாரிகள் மீது மோதியதில் 6 பேர் படுகாயம்!

 
 

உத்தரப் பிரதேசம் கான்பூரில் பிரபல தொழிலதிபர் கே.கே. மிஸ்ராவின் மகன் ஷிவம் மிஸ்ரா ஓட்டிய சொகுசு கார் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை பகல் லம்போர்கினி காரில் அதிவேகமாக சென்றபோது அவர் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. கார் முதலில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. பின்னர் சாலையோரம் நின்றிருந்த பாதசாரிகள் மீது பாய்ந்ததால் சம்பவ இடத்தில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் குறைந்தது 6 பேர் கடுமையாக காயமடைந்தனர். விபத்துக்குப் பிறகு ஷிவம் மிஸ்ரா தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதனால் அங்கிருந்த மக்கள் காரின் கண்ணாடியை உடைத்து அவரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. அவருடன் வந்த பாதுகாப்பு பணியாளர்கள் அவரை காப்பாற்றிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரையும் காயமடைந்தவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சம்பவம் குறித்து கான்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சொகுசு காரை பறிமுதல் செய்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் ஷிவம் மிஸ்ரா மதுபோதையில் இருந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதால் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!