தொடர் கனமழையால்  நிலச்சரிவு...  50 பேர் பலி, 125 பேர் மாயம்... எத்தியோப்பியாவில் பெரும் சோகம்! 

 

 

எத்தியோப்பியா நாட்டின் காமோ பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  மிகக் குறிப்பாக காச்சோ பாபா, கம்பா மற்றும் போன்கே மாவட்டங்களில் உள்ள பல குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் உறுதி செய்துள்ளன.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 50 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 125 பேர் மாயமாகி இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் வியாழக்கிழமை (மார்ச் 12) தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஒருவரை மட்டும் உயிருடன் மீட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான மீட்பு பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாயமானவர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!