இலங்கையில் நிலச்சரிவு... 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு !
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தின் ஒரு பகுதியே மண்ணுக்குள் புதையுண்டது. இதற்காக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தால் இலங்கையில் கடந்த சில நாட்களாக கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி 190க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், காணாமல் போன 2028 பேரை தேடும் பணிகள் தற்போது தீவிரமாக நடக்கிறது. புயல் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் சுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு பணிகளில் உள்ளூர் காவல் துறையினருடன் ராணுவம் கலந்துகொண்டு உதவி செய்து வருகிறது.இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் இலங்கையின் சில பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் நிலவ வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. இதனால் கொழும்பு, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!