மெட்ரோ ரயில் பணியில் மாயமான லேப்டாப் … குற்றவாளி கைது!
சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் சாலையில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிக்காக தனியார் நிறுவனம் தற்காலிக அலுவலகம் அமைத்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஆதம்பாக்கம் ஷாவாஸ் காலனி 1வது தெருவைச் சேர்ந்த வினோத்குமார்(39) மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 27ம் தேதி தனது விலை உயர்ந்த லேப்டாப்பை அலுவலகத்தில் வைத்து பணி மேற்பார்வைக்கு சென்றார். மாலை திரும்பி பார்த்த போது, லேப்டாப்ப் காணாமல் போய்விட்டது.
அந்த லேப்டாப்பில் மெட்ரோ ரயில் பணிகளுக்கான திட்டங்கள் மற்றும் வரை படங்கள் இருந்ததால், வினோத்குமார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விருகம்பாக்கம் உதவி கமிஷனர் பாஸ்கர் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியது. CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது, மெட்ரோ பணியில் உதவியாளராக பணியாற்றிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்ய குமார்(20) சம்பந்தம் தெரிந்தது.
போலிஸார் உடனடியாக ஆதித்ய குமாரை கைது செய்தனர். அவரது பக்கம் இருந்து விலை உயர்ந்த லேப்டாப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. மெட்ரோ பணிகளுக்கான முக்கிய திட்டங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!