undefined

லேட்டஸ்ட் அப்டேட்: இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... பத்திரமா இருங்க!

 

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயலின் தாக்கத்தினால், தமிழ்நாட்டின் வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடர்கிறது. இந்நிலையில், இன்று (நவம்பர் 30, ஞாயிற்றுக்கிழமை) காலை மழை நீடிக்க வாய்ப்புள்ள 18 மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று காலை  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், கோவை, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நீலகிரி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசப் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அத்துடன், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி கனமழை எச்சரிக்கை (ரெட் அலர்ட்):

தொடர்ந்து, டிட்வா புயல் காரணமாக இன்று காலை வரை திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் ('ரெட் அலர்ட்') பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்):

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழை:

சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கவும், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!