undefined

சட்டக்கல்லூரி  மாணவர் கத்தியால் குத்திக்கொலை! 

 
தெற்கு டெல்லியின் சங்கம் விஹாரில், உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு உச்சக்கட்டமாகி, 27 வயது டெல்லி பல்கலைக்கழக சட்ட மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பல்கலை வளாக சட்ட மையத்தில் முதலாமாண்டு எல்.எல்.பி படித்து வந்த முகமது இர்ஷாத், வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

  தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், படுகாயமடைந்திருந்த இர்ஷாத்தை மஜிதியா மக்பூல் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இர்ஷாதின் உடலில் பல ஆழமான குத்துக் காயங்கள் இருந்ததாகவும், தாக்குதல் மிகக் கொடூரமாக நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் இர்ஷாத்தின் மாமா முபாரக், அவரது மனைவி ரிஹானா கட்டூன், அவர்களது மகன்கள் இஷ்தியாக் மற்றும் ஒரு சிறுவன் ஈடுபட்டதாக, நேரில் கண்ட சாட்சியான இர்ஷாத்தின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் முதற்கட்ட விசாரணையில், சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வது தொடர்பான சிறிய பிரச்சினையே வாக்குவாதமாக மாறி, இறுதியில் மரணமளிக்கும் தாக்குதலாக முடிந்தது தெரிய வந்துள்ளது. குடும்ப தகராறு உயிரைக் கொண்டு போன இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!