undefined

அமேசான், மெட்டாவைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்திலும் ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பணிநீக்கம்!

 
iPhone உற்பத்தியின் மாமேதை ஆப்பிள், திடீரென அமெரிக்காவில் தனது விற்பனைத் துறையில் பணியாற்றிய பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் அரிதாக நடக்கும் நிறுவனமான ஆப்பிள் எடுத்த இந்த முடிவு தொழில்துறையில் அதிர்வலைகளை  கிளப்பியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பும் ஆஸ்திரேலியா–நியூசிலாந்தில் வேலைநீக்கம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் “விற்பனை அமைப்பில் மாற்றம்” என காரணம் கூறிய நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நிறுவனத்தின் பிற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், அரசுத்துறை, பெரிய நிறுவன வாடிக்கையாளர்களைக் கவனித்த அக்கவுண்ட் மேனேஜர்கள் முதல் தயாரிப்பு பிரசண்டேஷன் நடத்தும் குழுக்கள் வரை பல பிரிவுகள் இந்த சுருக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. வருமானம் உயர்விலிருக்கும் நேரத்தில் வந்த இந்த அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆப்பிள், இனி தன் தயாரிப்புகளின் விற்பனையை மூன்றாம் தரப்பு ரிசெல்லர்களை நம்பி மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதால் உள்துறை ஊதியச் செலவு குறைவதே இந்த மாற்றத்தின் காரணமாக பார்க்கப்படுகிறது. பெரிய அளவில் பணிநீக்கம் நடந்தது வெளியில் தெரியாமல் இருக்க சட்ட ரீதியாக எச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல். “பணிநீக்கம் கடைசி வழி” என கூறிய டிம் குக் தலைமையிலான ஆப்பிள், இப்போது எடுத்த முடிவு உலக தொழில்துறை கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!