30000 ஊழியர்கள் பணிநீக்கம்... ஆரக்கிள் ஐடி நிறுவனத்தில் அடுத்த அதிரடி!
உலகளவில் பிரபலமான ஒரு ஐடி நிறுவனம் ஆரக்கிள். ஒரே கட்டமாக 30 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு நிறுவன ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத் துறையில் நிலவும் மாற்றங்களே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மேகக் கணினி தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், செலவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பணியிடக் குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே பல ஐடி நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த அறிவிப்பு தொழில்துறையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் எவ்வாறு மாறும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலையுடன் உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!