2026 சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாகும்  முன்னணி நடிகைகள்... கேரள அரசியலில் பெரும் பரபரப்பு!

 

கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகைகள் மற்றும் நட்சத்திரங்கள் பலரும் இம்முறை நேரடியாகத் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக, தொழிலதிபர் சாபு எம். ஜேக்கப் தலைமையிலான 'ட்வென்டி 20' கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் திரைத்துறை மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகை அஞ்சலி நாயர் (திரிஷ்யம் 2 புகழ்) திருப்புணித்துறை தொகுதியில் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். தான் பிறந்த மண்ணிலேயே மக்களுக்குப் பணியாற்ற விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரு துறைகளிலும் பிரபலமான நடிகை வீணா நாயர் எட்டுமானூர்  தொகுதியிலும், நடிகை லட்சுமி பிரியா பெரும்பாவூர் தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பிக்பாஸ் மலையாளம் சீசன் 5 வெற்றியாளரும் இயக்குநருமான அகில் மாரார் திருக்காக்கரா  தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும், சமூக ஊடகப் பிரபலம் ப்ரோமி குர்யாகோஸ் அங்கமாலி தொகுதியிலும், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மருமகன் வர்கீஸ் ஜார்ஜ் கொடுங்கல்லூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். வழக்கமான அரசியல் கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களை முன்னிறுத்தும் 'ட்வென்டி 20' கட்சி, இந்த நட்சத்திர வேட்பாளர்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்க வாக்காளர்களைக் கவரத் திட்டமிட்டுள்ளது. கேரளாவின் பிரதான கூட்டணிகளான எல்.டி.எஃப் (LDF) மற்றும் யு.டி.எஃப் (UDF) கட்சிகளுக்கு இந்தப் புதிய நட்சத்திரப் பட்டாளம் எந்த அளவிற்குப் போட்டியாக இருக்கும் என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!