undefined

இன்றுடன் லீவு முடிகிறது... நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கம் - இந்த ரயில்கள் ரத்து!

 

தமிழகத்தில் பொங்கல் விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னை திரும்புவதை முன்னிட்டு, இன்று (ஜனவரி 18) தெற்கு ரயில்வே சார்பாக நாகர்கோவிலிலிருந்து தாம்பரத்திற்குச் சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவடைவதால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்பும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க ரயில்வே நிர்வாகம் இந்த ஒருவழி சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்துள்ளது.

சிறப்பு ரயிலின் கால அட்டவணை (வண்டி எண்: 06160) இன்று (ஜன. 18, ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்படும். இந்த ரயில் நாளை (ஜன. 19, திங்கட்கிழமை) அதிகாலை 4:10 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில் வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு வழியாகத் தாம்பரம் வந்தடையும். 

திருநெல்வேலியிலிருந்து இன்று பிற்பகல் 1 மணிக்குத் தாம்பரம் நோக்கிப் புறப்படும் ஒருவழி சிறப்பு ரயிலில் (வண்டி எண்: 06178) பயணிகளின் வசதிக்காகக் கூடுதலாக 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலில் மொத்தம் 10 படுக்கை வசதி பெட்டிகள், 8 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இடம் பெற்றுள்ளன.

சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், போதிய அளவில் முன்பதிவு செய்யப்படாத காரணத்தால் சில ரயில்களை ரத்து செய்வதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் மற்றும் சென்ட்ரல் வழித்தட ரத்து விவரம்:

நாளை ஜனவரி 19ம் தேதி தாம்பரத்திலிருந்து மதியம் 3:30 மணிக்குக் கன்னியாகுமரி செல்லும் ரயில் (எண்: 06011) ரத்து.

ஜனவரி 21: தாம்பரத்திலிருந்து மதியம் 12:30 மணிக்கு நாகர்கோவில் செல்லும் ரயில் (எண்: 06053) ரத்து.

ஜனவரி 19: சென்னை சென்ட்ரலிலிருந்து இரவு 11:25 மணிக்குக் கோவை செல்லும் ரயில் (எண்: 06033) ரத்து.

ஜனவரி 21: சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே இருமார்க்கமாகவும் இயங்கும் ரயில் (எண்: 06024) ரத்து.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!