குடையோட கிளம்புங்க... இன்று முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

 

இன்று வெளியில் கிளம்புவதாக இருந்தால் குடையோட கிளம்புங்க. இன்று மார்ச் 10ம் தேதி முதல் அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் சதத்தைக் கடந்து வெயில் வாட்டி வருகின்ற நிலையில், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மார்ச் 9ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இந்நிலையில் இன்று மார்ச் 10ம் தேதி தமிழத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போன்று மார்ச் 12, 13-ம் தேதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைக்காலத்தில் வீட்டை விட்டு கர்ப்பிணிகள், முதியவர்கள், சிறியவர்களை தனியே வெளியே அனுப்பாதீங்க. அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?