பிரபல பாடகர் ஹர்மன் சித்து திடீர் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!
பிரபல பஞ்சாபி பாடகர் ஹர்மன் சித்து சென்றுக் கொண்டிருந்த கார், லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ஹர்மன் சித்து உயிரிழந்தார். அவருக்கு வயது 37. இவரது ‘பேப்பர் யா பியார்’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மான்சா–பாட்டியாலா நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த ஹர்மன் சித்து, மான்சா அருகே கியாலா கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராமல் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் கார் முழுவதுமாக உருக்குலைந்து அடையாளம் காண முடியாத அளவுக்கு நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே பாடகர் ஹர்மன் சித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மண் மணம் மிக்க பாடல் வரிகளும், இனிமையான குரலும் காரணமாக பஞ்சாபி குடும்பங்களில் பரிச்சயமான குரலாக விளங்கியவர் சித்து. எப்போதும் தனது வேர்களுக்கு நெருக்கமாக இருந்த கலைஞராக அவரை ரசிகர்களும் சக கலைஞர்களும் சமூக ஊடகங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
மிஸ் பூஜாவுடன் இணைந்து பாடிய ‘பேப்பர் யா பியார்’ அவருக்கு ஒரே இரவில் கிடைத்த புகழின் அடையாளம். அதன்பிறகு ‘கோய் சக்கர் நாய்’, ‘பெபே பாபு’, ‘பாப்பர் ஷேர்’, ‘முல்தான் VS ரஷ்யா’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை வழங்கி பஞ்சாபி இசை உலகில் தனக்கென இடம்பிடித்தார். ஹர்மன் சித்துவின் மறைவுடன் பஞ்சாப் ஒரு திறமையான பாடகரையும், அதன் மண்ணின் உணர்வை சுமந்த குரலையும் இழந்து விட்டதாக ரசிகர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!