பிரபல பாடகி 'இலங்கையின் இசைக்குயில்' லதா காலமானார்... பிரபலங்கள் அஞ்சலி!
‘இலங்கையின் இசைக்குயில்’ என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்பட்டு வந்த பிரபல சிங்கள இசைப்பாடகி லதா வல்பொல, தனது 91வது வயதில் காலமானார். கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக சிங்கள திரையுலகில் லதாவின் குரல் ஒலித்து வந்தது.
ஒரு காலத்தின் இசை அடையாளமாக அவர் திகழ்ந்தார். கடந்த 1934ம் ஆண்டு பிறந்த லதா வல்பொல, தேவாலய இசைக் குழுக்களில் தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர் வானொலி, திரைத்துறையில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். 1952-ஆம் ஆண்டு ‘எதா ரே’ திரைப்படம் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நிலைத்தார். சரஸவிய விருதுகள் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச கௌரவங்களை பெற்றார். அவரது மறைவு, சிங்கள இசை உலகில் ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!