undefined

ஜி ராம் ஜி திட்டத்திற்கு எதிர்ப்பு… சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!

 

ஒன்றிய அரசின் ஜி ராம் ஜி திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் ஏற்க முடியாது என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைத்திட்டம் 2005-ன் சட்டத்தின் அடிப்படையில் தொடர வேண்டும் என்றும், கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேலை வழங்கும் முறையில் மாற்றம் செய்யக் கூடாது எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வேலைத் திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளை மாநில அரசே வகுத்துக் கொள்ள அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் வலியுறுத்துகிறது. கிராமப்புற மக்களின் நலன் பாதுகாக்க தமிழக அரசு உறுதியாக செயல்படும் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!