லியோ' - ’எஸ்கே 21’ படக்குழு சந்திப்பு?! கொண்டாடும் ரசிகர்கள்!!

 

சிவகார்த்திகேயனின்  21 வது திரைப்படம் ‘எஸ்கே21’ இந்தப் படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற உள்ளது.  விரைவில் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் அனைவரும் காஷ்மீர் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பிய ’லியோ ’ படக்குழுவிடம் ’எஸ்கே 21’ படக்குழுவினர் காஷ்மீரில் உள்ள அழகிய லொகேஷன்கள் மற்றும் வெப்பநிலை குறித்து ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ’லியோ’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிலர் ‘எஸ்கே21’ படக்குழுவினர்களுக்கு சில நல்ல ஆலோசனைகளை கூறலாம்.  

இந்த திரைப்படத்திற்கு பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில்  இந்த படத்தின் படப்பிடிப்பு  காஷ்மீரில் தொடங்க உள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டன. அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் திரைக்கு வரலாம்  என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!