undefined

 வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற இளைஞர் மீது சிறுத்தை தாக்குதல்!

 
 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் இரவு நேர காவலாளியாக நேபாளத்தை சேர்ந்த ஜனக் பணியாற்றி வருகிறார். அவரது மகன் பகதூர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறைக்காக கோத்தகிரிக்கு வந்த பகதூர், நேற்று முன்தினம் இரவு வளர்ப்பு நாயுடன் வெளியே சென்றார். சில மணி நேரங்களுக்கு பிறகு நாய் மட்டும் வீட்டிற்கு திரும்பியது.

இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் பகதூரை தேடி பள்ளி வளாகத்தில் சென்றனர். அப்போது அவர் படுகாயங்களுடன் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வனத்துறையினர் நடத்திய விசாரணையில், பள்ளி வளாகத்தில் உலா வந்த சிறுத்தை நாயை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. நாயை காப்பாற்ற முயன்றபோது பகதூர் மீது சிறுத்தை தாக்கியது என கூறப்படுகிறது. முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!