undefined

 கோடாரியால் சிறுத்தையை தாக்கி கொலை செய்த விவசாயி! 

 
 

 

ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி-பெஹ்ரூர் மாவட்டம் கர்கதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஷ்ரவன் குர்ஜர் (48), தனது ஆடுகளுக்குத் தீவனம் சேகரிக்க வயலுக்கு சென்றிருந்தார். அப்போது மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது அருகிலிருந்த புதர்களில் மறைந்திருந்த சிறுத்தைக் குட்டி திடீரென அவரைத் தாக்கியது. எதிர்பாராத தாக்குதலால் அவர் கடுமையாக காயமடைந்தார்.

சிறுத்தையின் நகம் பட்டதோடு கடித்ததால் விவசாயிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. உயிர் காக்க முயன்ற அவர், கையில் இருந்த கோடரியால் சிறுத்தையின் தலையில் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் சிறுத்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தொடர்ந்து காயமடைந்த விவசாயி உடனடியாக ஆல்வார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். சிறுத்தையின் உடல் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரி மனோஜ் நாகா தெரிவித்தார். சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!