undefined

லெஸ்பியன் உறவால் விபரீதம் ... கூலிப்படை ஏவி கணவரை கொலை செய்த  மனைவி! 

 

 

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் திகார் கிராமத்தில் கடந்த 14-ம் தேதி விவசாயி சுமர் சிங் (33) கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டதாக தெரிய வந்தது.

போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியது. சுமர் சிங்கை அவரது மனைவி ரேணு தேவி (28) கூலிப்படையை ஏவி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேணு தேவிக்கும் அதே பகுதியை சேர்ந்த மால்தி தேவி (27) என்பவருக்கும் நெருங்கிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த உறவுக்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இதற்காக ரூ.60 ஆயிரம் கூலிக்கு ஜித்தேந்திர குப்தா என்பவரை தொடர்பு கொண்டனர். அவரது கூட்டாளிகள் ராஜு சோன்கர், ராம் பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து சுமர் சிங்கை கழுத்தை நெரித்தும் சுத்தியலால் தாக்கியும் கொலை செய்தனர். இந்த வழக்கில் ரேணு தேவி, மால்தி தேவி, ராஜு சோன்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!