ரஜினியின் 'வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு உற்சாகமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலையிலேயே ரஜினியின் இல்லம் முன்பு ரசிகர்கள் குவிந்து வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ரஜினியின் சிறப்புகளைப் பட்டியலிட்டு வாழ்த்தியுள்ளார்: 'ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!' என்று குறிப்பிட்ட முதலமைச்சர், "மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!" என்று பாராட்டியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!